பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி திறக்க உள்ளார். பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பாலம். எனவே இந்த பாம்பன் பாலத்திற்கு ராமேஸ்வரத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பிறந்து, வளர்ந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை புதிய பாம்பன் பாலத்திற்கு மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். பிரதமர் அவர்கள் ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலத்தைத் திறக்க வரும் நிலையில் அந்த பாலத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல்கலாம் அவர்கள் பெயரைச் சூட்டி இஸ்லாமியர்களுக்கும், ராமேஸ்வரத்திற்கும் பாரம்பரியம் மிக்க நமது பாம்பன் பாலத்திற்கும் பெருமையைச் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ரம்ஜான் விரதம் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் APJ அப்துல்கலாம் அவர்களின் பெயரை வைப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு கவுரவத்தை இந்த ரம்ஜான் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *