ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.