தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் அடிப்படை வசதிகள் செய்து தர மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவுதமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை
மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவுதமிழ்நாடு பாஜகமாநிலச் செயலாளர்மருது பாண்டியன் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் அதில்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்கு 19 ஆண்டுகளுக்கு பின்பு வரும் ஏப்ரல் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் தென்காசி மாவட்டம் முழுவதும் மட்டுமல்லாது தமிழக முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், சிவாச்சாரியார்கள் மடாதிபதிகள், ஆதீனங்கள் என பல்வேறு தரப்பு மக்கள் பெருமளவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வருகை தருவார்கள் என்பதால் இவர்களுக்கு தேவையான வாகனங்கள் நிறுத்தும் வசதி, குடிநீர் வசதி கழிப்பிடம்,மருத்துவ உதவி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் போன்ற ஏற்பாடுகள் செய்து தரும்படி மாவட்ட நிர்வாகத்தை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என மனுவில் தெரிவித்துள்ளார்
