இந்தியாவின் அறிவுசார் மறுமலர்ச்சி தற்சார்புடைய தேசத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது: பிரதமர் பாராட்டு

இந்தியப் பிரதமர் மோடி

தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவின் அறிவுசார் மறுமலர்ச்சி; கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகளவில் போட்டியிடும் தற்சார்புடைய தேசத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது: பிரதமர் பாராட்டு

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கல்வித் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை எடுத்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவின் அறிவுசார் மறுமலர்ச்சி என்றும், கல்வி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் உலகளவில் போட்டியிடும் தற்சார்புடைய தேசத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது என்றும் பாராட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து அவர் கூறியிருப்பதாவது:
“கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கல்வித் துறை எவ்வாறு வரலாற்று மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் விளக்கியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு சீர்திருத்தத்தை விடவும் மேலானது; இது இந்தியாவின் அறிவார்ந்த மறுமலர்ச்சி என்பதுடன், கல்வி மற்றும் புத்தாக்கம் மூலம் உலகளவில் போட்டியிடும் தற்சார்புடைய தேசத்திற்கு வழி வகுக்கிறது”.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *