தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழத்திற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள முத்துசாமிபுரம் சொக்கம்பட்டி பொன்னையாபுரம் வாசுதேவ நல்லூர் , நவாச்சாலை, அச்சந்தி பகுதிகளில் விளையும் எலுமிச்சைக்கு எப்போதும் மிகுந்த வரவேற்பு உண்டு மேலும் புளியங்குடி எலுமிச்சை மெல்லிய நறுமணத் தோலைக் கொண்டது, மிக அதிக சிட்ரஸ் அளவு மற்றும் ஏராளமான சாறு கொண்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, விவசாய மொழியில் PKM 1 என்று அழைக்கப்படும் இந்தப் பழங்கள், 100 கிராம் பழச்சாற்றில் 34.29 மி.கி என்ற அதிக அஸ்கார்பிக் அமில உள்ளடக்கத்தையும், 8.0 பிரிக்ஸ் என்ற மொத்த கரையக்கூடிய திடப்பொருட்களையும் கொண்டுள்ளன. சாற்றின் உள்ளடக்கம் எடையில் 52.3% ஆகும், மேலும் இது அதிக மகசூல் தரும் வகையாகும்.மேலபுளியங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் சில வருடத்திற்கு முன்பு புளியங்கு எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பித்திருந்தனர் மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அன்னமாலை என் மண் என் மக்கள் பாதையாத்திரையின் போது கோரிக்கை மனு அளித்திருந்தனர் ஆகவே இக் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்
அதன் அடிப்படையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு பியூஸ் கோயல் ஆணைக்கிணங்க புளியங்குடியை எலுமிச்சைக்கு புவி சார் குறியீடு விரைந்து வழங்கப்பட்டுள்ளது மேலும் புளியங்குடியில் 12.03.25 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும் தமிழக பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் மாநில செயலாளர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் உள்ள நபார்டு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள GI அலுவலகத்தை தொடர்பு புவிசார் குறியீடு தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்திவந்தார் ,இந்நிலையில் எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாய பெருமக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் புளியங்குடி எலுமிச்சை புவிசார் குறியீடு பெற்று தர முயற்சி மேற்கொண்ட மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு பியூஸ் கோயல் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏவுக்கும் தென்காசி மாவட்ட மக்களின் சார்பாகவும் விவசாய பெருமக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் மாநில செயலாளர் மருது பாண்டியன் தெரிவித்துள்ளார்