காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93
கடந்த சில தினங்களாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி ஆனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தவர் குமரி ஆனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.
குமரி அனந்தனின் மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவரது பங்களிப்புகள் எல்லோருக்கும் நினைவில் நிலைக்கும்.