போப் பிரான்சிஸ் மறைவு – புதிய தமிழகம் இரங்கல்.!

உலக கத்தோலிக்கு திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்.!

உலக கத்தோலிக்க திருச்சபையின் 266 வது தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மரணம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஐரோப்பியர் அல்லாத ஒருவர் முதன்முறையாக போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற பெருமைக்குரியவர் போப் பிரான்சிஸ் அவர்கள். அவர் வாடிகன் நகரின் தலைவராகவும், உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க மக்களின் தலைவராகவும் விளங்கியும் மிகவும் எளிய வாழ்க்கையை கடைபிடித்துள்ளார். அவர் உலக அளவில் அனைத்துவித ஏற்றத்தாழ்வுகளும் ஒழிய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். மேலும் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனைகள் தீரவும், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தவும் குரல் கொடுத்து தனித்துவமான போப் ஆக விளங்கிய அவரது மரணத்தால் வேதனை அடையும் கத்தோலிக்க பெருமக்கள் அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.04.2025

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *