நேற்று உடல்நலக் குறைவால் மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
போப் ஆண்டவர் ஒருவர் இறந்துவிட்டால், அதனை வாடிகன் நகரின் நிர்வாகி ஒருவர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார். போப் ஆண்டவர் அருகே சென்று அவரது பெயரை 3 முறை உச்சரிப்பார்.அப்போது பதிலளிக்காமல் இருந்தால் போப் இறந்துவிட்டதாக அர்த்தமாகிறது. அதனை தொடர்ந்து துக்க மணி அடிக்கப்பட்டு போப் மறைவு அறிவிக்கப்படும். அதனை தொடர்ந்து உலகில் உள்ள தேவாலயங்களுக்கு இந்த செய்தி தெரிவிக்கப்படும்.
இதை அடுத்துபோப் ஆண்டவர் வாழ்ந்த இல்லத்தின் கதவுகள் ஒரு வாரம் பூட்டப்படும். முன்பு, வீட்டிற்குள் யாரும் நுழைந்துவிட கூடாது என்பதற்காக பூட்டப்பட்டது. அது நாளடைவில் பாரம்பரியமாக மாறியது.
பின்னர் அவர் அணிந்திருக்கும் மீனவ மோதிரம் மற்றும் முத்திரை நசுக்கி அழிக்கப்படும். அதன் பொருள், அத்தகைய அழிவுக்குள் பிறகு தான் ஒரு போப்பின் பதவிகாலம் முடிவடைந்தது என கூறப்படும்.ஒரு மீனவன் மீன் பிடிக்கும் படத்தில் உள்ள மோதிரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசுவின் முதல் சீடர்கள் அனைவரும் மீனவர்கள். இயேசு ஒரு சிறந்த மீனவராகவும் இருந்தார். முதல் போப் பேதுரு, இந்த மீன்பிடித் திறமையை இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டார். ஒவ்வொரு போப்பும் தனித்தனி மீனவர் மோதிரத்தை அணிவது வழக்கம்.போப்பை சந்திக்கும் போது மக்கள் இந்த மோதிரத்தை முத்தமிடுகிறார்கள். அது இயேசுவை முத்தமிடுவது போன்றது.
போப் இறந்து 4 முதல் 6 நாட்களுக்குள் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற வேண்டும். முன்னதாக போப் ஆண்டவர், தான் உயிருடன் இருக்கும்போதே, தனது உடலை அடக்கம் செய்ய வேண்டிய இடம் பற்றி முடிவு தெரிவித்துவிடுவார். அப்படி முடிவு எடுக்கப்படவில்லை என்றால், அவரது மரணத்திற்கு பிறகு, அவரது உடல் வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
முந்தைய போப்புகள் மூன்று வகையான சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவை சைப்ரஸ், ஈயம் மற்றும் எல்ம், ஒன்றின் உள்ளே மற்றொன்று வைக்கப்பட்டன.
ஆனால் மரம் மற்றும் துத்தநாகத்தால் ஆன ஒரு சவப்பெட்டியில் அடக்கம் செய்ய போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்து இருந்தார். பிரான்சிஸின் முந்தைய போப், ஒரு காகித சுருள் கொண்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக போப் ஆண்டவர் நெற்றியில் வெள்ளி சுத்தியல் கொண்டு தட்டப்படும். அவரது இறப்புக்கு முன் நடைபெறும் இறுதி பரிசோதனை இது என கூறப்படுகிறது.
இந்த நடைமுறை 1963களில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.