கடையநல்லூர் நகராட்சியை தரம் உயர்த்தினால் திமுக வெற்றி பாதிக்கும் ?

கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என அதிமுக கேள்வி 

கடையநல்லூர் நகராட்சியை தரம் உயர்த்தினால் திமுக வெற்றி பாதிக்குமா ? இதுகுறித்து தென்காசி மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயமாலன் விடுத்துள்ள அறிக்கையில்

அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளின் வெற்றி உறுதியாகி இருப்பது கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் திமுக விடியல் ஆட்சி என்ற போர்வையில் தமிழக மக்களின் வாழ்வியல் விடியலுக்கு மூடு விழாவை அரங்கேற்றி வருகிறது அந்த வகையில் இந்த விடியா அரசில் அனு தினமும் நடந்து வருகின்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெண்களுக்கான பாதுகாப்பின்மை ஊழல் நிர்வாகம் அரசு பணி நியமனத்தில் முறைகேடுகள் விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவற்றாதது அதேபோல் அரசு ஊழியர்கள் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோருக்கான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாதது மாணவர்களின் கல்விக் கடன் நீட் ரத்து என ஒட்டுமொத்த வாக்குறுதிகளையும் பொய்யாக்கி வரும் எண்ணற்ற விஷயங்களில் அதிமுகவின் பொது செயலாளர்
எடப்பாடியார் நித்தமும் தனது கண்டன அறிக்கைகள் மூலமாக ஊடகங்கள் வாயிலாகவும் சட்டமன்றத்திலும் சரி சட்டமன்றத்திற்கு வெளியேயும் சரி செய்தித்தாள்களின் பேட்டிகள் மூலமாகவும் மக்கள் மன்றத்திற்கு நடக்கின்ற ஒவ்வொரு மக்கள் விரோத போக்கினையும் சுட்டிக்காட்டி வருகிறார். நல்லது செய்வது போல மக்களுக்கு அனுதினம் ஒவ்வொரு திட்டங்களை நூதன முறையில் பெயர் வைத்துக் கொண்டு சொத்து வரி ,மின்கட்டண உயர்வு, முத்திரைத்தாள் பதிவு கட்டண உயர்வு என எண்ணற்ற மக்கள் விரோதத் திட்டங்களையும் அரங்கேற்றி வருகிறது இந்த திமுக தலைமையிலான விடியா ஆட்சி நேற்றைய தினம் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள 11 நகராட்சிகளின் நிலைகளை தரம் உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூபாய் 15 கோடிக்கு மேலாகவும் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த ரூபாய் 15 கோடி வரையிலும் முதல் நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ரூபாய் ஒன்பது கோடி வரையிலும் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த ரூபாய் ஆறு கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திருச்செங்கோடு உடுமலைப்பேட்டை பழனி நந்திவரம் கூடுவாஞ்சேரி பல்லடம் குன்றத்தூர் ராமேஸ்வரம் மாங்காடு வெள்ளகோவில் அரியலூர் அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என அவ்வரிக்கையில் தெரிவித்துள்ளார் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது அதே நேரம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா அவர்கள் கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட கோரிக்கை விடுத்தார் ஆனால் இந்த விடியா அரசின் மக்களின் விரோத போக்கை கடைபிடித்து வரும் தமிழக முதல்வர் அடுத்து தமிழகத்தை ஆளப்போவது அதிமுக தான் என்பதை தனது ஆய்வுக் குழுக்கள் மூலம் தெரிந்து கொண்டு அதிமுக வெகுவாக கோலோச்சுகின்ற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதில் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் தமிழக அரசு தேர்வு நிலை நகராட்சியாக கடையநல்லூர் நகராட்சியை அறிவிக்க அனைத்து நிபந்தனைகளும் குறிப்பாக வருவாய் அளவு இருக்கின்ற நிலையில் எதற்காக கடையநல்லூர் நகராட்சியை தரம் உயர்த்துவதில் புறம் தள்ளியது. அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை முன்னரே அறிந்த அச்சத்தினால் தமிழகத்தின் பல்வேறு நகர சபைகளை தரம் உயர்த்துவதில் முனைப்பு காட்ட வில்லை இந்த திமுக தலைமையிலான அரசு அதிலும் தென்காசி மாவட்டம் முற்றிலுமாக நகராட்சிகளை தரம் உயர்த்துவதில் இந்த அரசு அக்கறை கொள்ளவில்லை இதே போன்று தான் தொழிற்சாலைகள் கூட இந்த மாவட்டத்தில் அரசு சார்பில் அமைக்கப்படவில்லை வெளிநாடுகளுக்குச் சென்று எண்ணற்ற முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தேன் என பெருமிதம் கொண்டு மேடைகள் தோறும் முழங்குகின்ற தமிழக முதல்வர் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்காக என்ன திட்டம் அறிவித்தார் கொண்டு வந்தார் என்பதை வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்த வேண்டும் என அறிக்கையில் ஜெயமாலன் தெரிவித்துள்ளார்……

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *