குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடுவிழா

விலங்கியல் துறை சார்பில் மரக் கன்று நட்டனர்

உலக சுற்றுச்சூழல் தினம் 1973 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கடைபிடிக்கும் வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை சார்பில்  உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு சார்பாக மரக்கன்று நடு விழா கொண்டாடப்பட்டது.

 

 

விலங்கியல் துறை மாணவிகள் மரக்கன்று நட்டனர்

 

விழாவிற்க்கு கல்லூரி முதல்வர் முனைவர். அமிர்தவல்லி தலைமை தாங்கினார். விலங்கியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர். க.வசந்தி வரவேற்புரை வழங்கி உலக சுற்று சூழல் தினத்தின் சிறப்புகளை விளக்கிப் பேசினார்

இந்நிகழ்ச்சியில் சுயதொழில் பயிற்றுநர் பிரமநாயகம் மற்றும் விலங்கியல் துறை மாணவிகள் கல்லூரி வளாகத்தினுள் மரங்களை நட்டு உலக சுற்று சூழல் தினத்தை கொண்டாடினர். ,

நிறைவாக இணைப்பேராசிரியர் முனைவர்.பா.இசக்கியம்மாள் நன்றியுரை கூறினார் . விழா ஏற்பாட்டினை விலங்கியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *