செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 114 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் அதிகாரிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி எஸ் ஆர் வேங்கட ரமணா, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி , சர்வ கட்சி பிரமுகர்கள் , பிராமணர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நகராட்சி அலுவலகத்தை ஒட்டி உள்ள பூங்காவில் அமைந்துள்ள வாஞ்சிநாதன் நினைவு மணி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.