தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டமானது மிகப் பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவிற்காக குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு மருத்துவம் குணம் நிறைந்த நீர்வீழ்ச்சிகளில் நீராட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளபகுதியாக குற்றாலம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் அதிக காடுகளையும் மரங்களையும் உள்ளடக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. அதிகமான வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது

மேலும் அளவு நச்சுப் புகை வெளியேறுகிறது ஆகவே தென்காசியை மையமாக வைத்து முதல் கட்டமாக 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு குற்றாலம்,பழைய குற்றாலம், ஐந்தருவி திருமலை கோவில், செங்கோட்டை, புளியரை மேக்கரை, தோரணமலை சுரண்டை, பாவூர்சத்திரம் கடையநல்லூர் போன்ற பகுதிகளுக்கு மின்சார பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

மேலும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான இ-சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி தர பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன் ,சுற்றுலாத்துறை அமைச்சர் ,தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ,திருநெல்வேலி மண்டல தமிழ்நாடு அரசு மாநில போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *