திருச்செந்தூர் கோயில் எனக்கு மிக மிக மனதிற்கு விருப்பமான கோயில்..
பல சவாலான முடிவுகளை அந்த அன்பான முருகன் முன்னால் எடுத்திருக்கிறேன்..
திருச்செந்தூர் அலைகளில் கால் வைக்கும் பொழுது கவலைகள் எல்லாம் பறந்து ஓடிவிடும்..
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட விருப்பமுடையவளாக இருந்தேன் .
ஆனால் பல காரணங்களுக்காக அங்கே செல்ல வேண்டாம் என முடிவெடுத்தேன்…
ஆனாலும் முருகனின் குடமுழுக்குவிற்கு போக முடியவில்ல என எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் கண்ணில் பட்டது அந்த ஒரு செய்தி.
வல்ல கோட்டை முருகன் கோயிலிலும் அதே ஏழாம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது என்று மகிழ்ச்சியான செய்தி தான்…
எத்தலத்தில் இருந்தாலும் அது என் முருகன் தான்… திருச்செந்தூரை மனதில் கொண்டு வல்லக்கோட்டை முருகனை நேரில் கண்டு.. குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டேன்…
மிக்க மகிழ்ச்சி கொண்டேன்.. முருகனின் ஆசியை முழுமையாகப் பெற்றேன்…
சவால்களை வேல் பார்த்துக் கொள்ளும்.. நம் வேலையை நாம் பார்த்தால் வெற்றி பெறலாம்.. என்ற எண்ணத்தை நெஞ்சத்தில் முழுமையாக பதிய வைத்த குடமுழுக்கு விழா இது… தமிழிசை செளந்தராஜன்.
