பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் தளிர்-திப்பணம்பட்டி கிராமம் இணைந்து 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் Ln T.சுரேஷ் தலைமை தாங்கினார்கள். செயலாளர் Ln S.பரமசிவன், கண்தான விழிப்புணர்வுக் குழு பொருளாளர் இரா.சந்திரன், மற்றும் தளிர் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் செயலாளர் .Ln.K.P.தங்கராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வுக் குழு நிறுவனர் Ln K.R.P. இளங்கோ தொகுப்புரை ஆற்றினார் K. பிச்சையா கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.
இந்த மரக்கன்று நடும் விழாவில் புங்கை, வாகை,வேம்பு,அரசு,நவ்வல் மற்றும் நீர்மருது போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் தளிர் நிர்வாகிகள் கார்த்திகைராஜன், முருகேசன் மற்றும் 30 தளிர் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். விழா முடிவில் ஆசிரியர் Ln E.சுரேஷ் நன்றியுரையாற்றினார்.விழா ஏற்பாட்டினை வேல்முருகன், வைத்திலிங்கம் மற்றும் அனித்,ச தமிழமுதன் ஆகியோர் செய்திருந்தனர்.
