திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை நடைபெற உள்ளது.கோவிலில் முன்பக்க வாயிலில் செவ்வந்தி, சம்பங்கி, கிரேந்தி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் 2 டன் எடை பூக்கள் கொண்டு தோரணம் அமைக்கப்பட்டுள்ளதுஅண்ணாச்சி பழம், ஆரஞ்சு பழம், கரும்பு, மற்றும் சோளக்கதிர்கள், மாங்காய்களும் இதில் இடம்பெற்றுள்ளன
அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் கோவில் முன்பு வந்து குவிந்துள்ளனர்.கோயில் வளாகம், நாழிக்கிணறு, கலையரங்கம், ராஜகோபுர வாசல் போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.கோவில் வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
