உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் கோப்பையை வென்று வரலாற்று சாதனையுடன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு எனது பாராட்டுகள். விளையாட்டில் தங்களது சிறப்பான திறனை வெளிப்படுத்தி வலிமையான எதிரணியினரை வென்றுள்ளது, புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்.”என குறிப்பிட்டுள்ளார்
