மனிதநேய ஓட்டுநர் கர்ணன்.

சேலம் பனிமலையில் பணிபுரிந்து வரும் ஓட்டுநருடன் கூடிய நடத்துனர் திருவாளர் என் கர்ணன் கணினி எண் டி2 30023 அவர்கள் சேலத்தில் இருந்து திருச்செந்தூர் வழித்தடத்தில் பணி புரிந்த போது வயது முதிர்ந்த தம்பதியர் இருவர் திருச்செந்தூருக்கு நமது பேருந்தில் இருக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் பயணிகளின் கோரிக்கைக்கிணங்க ஒரு இருக்கையை முதியவருக்கும், நடத்துனரின் இருக்கையை அந்த மூதாட்டிக்கும் அளித்து பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். பேருந்து திண்டுக்கல் அருகே நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் சென்றபோது பயணிகள் அனைவரும் அயர்ந்து உறங்கிய நிலையில் அந்த மூதாட்டி அங்கும் இங்கும் பேருந்தில் சென்றுள்ளார்.ஒரு கட்டத்தில் பயணிகள் ஏதோ துர்நாற்றம் வீசுகிறது என்று நடத்துனரிடம் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக நடத்துனர் பேருந்தின் அனைத்து விளக்குகளை ஆன் செய்து பார்த்தபோது மூதாட்டி பேருந்தில் மலம் கழித்திருந்தது தெரிய வரவே , ஓட்டுனரிடம் தகவலை தெரிவித்து தண்ணீர் உள்ள பகுதியில் வண்டியை நிறுத்தி மற்ற பயணிகளிடம் மேற்கண்ட விவரத்தை தெரிவித்து பேருந்தில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டு நடத்துனரே பேருந்தை சுத்தம் செய்து அந்த மூதாட்டி வைத்திருந்த புடவையை மாற்றச் சொல்லி மீண்டும் பேருந்து இயக்கி உள்ளார் . பேருந்து திருச்செந்தூர் சென்றடைந்ததும் அந்த முதியவர் இருவரும் நடத்துனருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தியானது சூரியன் பண்பலை அலைவரிசையில் நடத்துறையின் செயலை பாராட்டி ஒளிபரப்பப்பட்டதை நமது மேலாண் இயக்குனருக்கு கவனத்துக்கு வரவே பணியாளரை சேலம் பணிமனையில் இருந்து சென்னைக்கு வரவழைத்து, நடத்துனருக்கு அனைத்து அலுவலர்கள் முன்னிலையில் தேநீர் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் மற்றும் விருது கேடயம் வழங்கி பணியாளரை கௌரவப்படுத்தினார்கள். நிர்வாகத்தின் சார்பாக பணியாளருக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.

↳ Share

3 thoughts on “மனிதநேய ஓட்டுநர் கர்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *